5. உலகின் நோக்கம் ஒழியா இன்பமே - பாகம் 4
***************************************************
இந்த நிலையில் மனுக்குலத்துக்கு தக்க ஒரு வழிகாட்டி தேவை. அவர்களை மக்கள் ஞானிகள் என்கின்றனர். அவர்கள், அந்தப் பரிபூரண சுகத்தை அடைந்து தெளிந்தவர்கள். மேலும், அந்த சுகத்திலேயே எப்போதும் திளைத்துக் கொண்டு இருப்பவர்கள். ஆனால், வெளியில் பார்க்கும்போது இயல்பாகவே தெரியும்.
அந்தப் பரிபூரண சுகத்தை அடையப் பிறருக்கு உதவுபவர்கள். அவர்களில் ஒருவரே, பகவான் இரமணர்.
அவரால் உலக மக்களுக்குப் போதிக்கப்பட்டது என்ன?
அவரிடம் இருந்து மக்கள் அடையவேண்டிய உயர் நலன்கள் யாவை?
யுகயுகமாக மக்கள் அறிவால் பல்வேறு துறைகளிலும் முயலும் முயற்சி எதுக்காக? சுகத்துக்காகத்தான். இதற்கு பகவான் இரமணர் காட்டிய வழி:
ஒரு நேர்கோண முக்கோணத்தின் குறுக்குக் கோடுபோல (hypotenuse of a right-angled triangle) நேர் வழியாகவும், கடைப்பிடிக்க எளிமையாகவும் இருப்பதைக் காண்போம்.
அந்தப் பரிபூரண சுகத்தை அடைய விரும்புகிறவர்கள் யாராய் இருந்தாலும், அவர்கள் இந்த வழியைப் பின்பற்றலாம். மதங்களில் கூறப்பட்டுள்ள உயர்ந்த குறிக்கோள் கடவுள் எனப்படுவது. அந்தக் கடவுளை "இல்லை" என்று கூறுவோர்கூட , எனக்குச் சுகம் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். மனித உடல் எடுத்த யாரும் இதற்கு விலக்கல்ல. இரமணர் ஒரு மத குரு அல்ல. உலகப் பொது நோக்கமாகிய பரிபூரண சுகத்தை அடையும் வழியை போதிப்பதால் அவர் உலக குரு எனக் கொள்ளலாம்.
இனி வழி என்ன? எனப் பார்ப்போம்.
No comments:
Post a Comment